கொல்கத்தாவில் இன்று பா.ஜ.க. பிரசார கூட்டம்; பிரதமர் மோடி பங்கேற்கிறார்


கொல்கத்தாவில் இன்று பா.ஜ.க. பிரசார கூட்டம்; பிரதமர் மோடி  பங்கேற்கிறார்
x
தினத்தந்தி 7 March 2021 8:29 AM IST (Updated: 7 March 2021 8:29 AM IST)
t-max-icont-min-icon

தேர்தல் அறிவிப்புக்கு பிறகு பிரதமர் மோடி முதல் முறையாக பங்கேற்கும் தேர்தல் பிரசார கூட்டம் இது என்பதால் அக்கட்சியினர் மத்தியில் மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொல்கத்தா, 

8 கட்ட தேர்தலை சந்திக்க உள்ள மேற்கு வங்காளத்தில், தேர்தல் களம் சூடு பிடித்து வருகிறது. இந்த தருணத்தில் கொல்கத்தாவில் உள்ள படை அணிவகுப்பு மைதானத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பா.ஜ.க. பிரசார பொதுக்கூட்டம் நடக்கிறது. பிரமாண்ட அளவில் நடக்கிற இந்த கூட்டத்தில் பிரதமர் மோடியுடன் நடிகர் மிதுன் சக்கரவர்த்தியும் கலந்து கொள்வார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. 

இதை பா.ஜ.க. வட்டாரங்கள் உறுதிபடுத்துகின்றன. மிதுன் சக்கரவர்த்தி, திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் பதவி வகித்தவர். ஆனால் அவர் பின்னர் அரசியலில் இருந்து விலகி விட்டார். இப்போது 70 வயதான மிதுன் சக்கரவர்த்தி, அரசியலில் தனது 2-வது இன்னிங்சை பா.ஜ.க.வில் சேர்ந்து தொடங்குவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. அந்த கேள்விக்கு இன்று விடை கிடைக்கும்.

மேற்கு வங்காளத்தில் தேர்தல் அறிவிப்புக்கு பிறகு பிரதமர் மோடி முதல் முறையாக பங்கேற்கும் தேர்தல் பிரசார கூட்டம் இது என்பதால் அக்கட்சியினர் மத்தியில் மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story