உத்தரபிரதேசத்தில் ஆன்மீக நிகழ்ச்சியில் பிரசாதம் சாப்பிட்ட 32 பேருக்கு உடல்நலம் பாதிப்பு


உத்தரபிரதேசத்தில் ஆன்மீக நிகழ்ச்சியில் பிரசாதம் சாப்பிட்ட 32 பேருக்கு உடல்நலம் பாதிப்பு
x
தினத்தந்தி 8 March 2021 4:28 AM IST (Updated: 8 March 2021 4:28 AM IST)
t-max-icont-min-icon

உத்தரபிரதேசத்தில் ஆன்மீக நிகழ்ச்சியில் வழங்கப்பட்ட பிரசாதத்தை சாப்பிட்ட 32 பேருக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கன்னோஜ்,

உத்தரபிரதேச மாநிலம் கன்னோஜ் மாவட்டத்தில் உள்ள ஜுகாயா கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு ‘பாகவத கதை’ நிகழ்வு நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. அதைச் சாப்பிட்ட 29 பேருக்கு வயிற்று வலி ஏற்பட்டது. 

அவர்கள் அனைவரும் மாவட்ட ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து மேலும் 3 பேருக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஆன்மீக நிகழ்ச்சியில் வழங்கப்பட்ட பிரசாதம் கெட்டுப்போனதாக இருந்ததால் பக்தர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டிருக்கிறது என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.

Next Story