சர்வதேச ஆண்கள் தினமும் கொண்டாடப்பட வேண்டும் - பாஜக பெண் எம்.பி. கோரிக்கை
சர்வதேச ஆண்கள் தினமும் கொண்டாடப்பட வேண்டும் என நாடாளுமன்ற மாநிலங்களவையில் பாஜக பெண் எம்.பி. சோனல் மன்சிங் கோரிக்கை விடுத்தார்.
புதுடெல்லி,
சர்வதேச மகளிர் தினம் ஆண்டுதோறும் மார்ச் 8-ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தவகையில், இன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி, அரசியல் கட்சியினர், தலைவர்கள், பிரபலங்கள் என பல துறைகளை சேர்ந்தவர்களும் மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். தெலுங்கானா மாநிலத்தில் அனைத்து பெண் ஊழியர்களுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், மத்திய பட்ஜெட் தொடரின் இரண்டாவது அமர்வுக்காக நாடாளுமன்றம் இன்று கூடியது. மாநிலங்களவையில் அவைத்தலைவர் வெங்கையா நாயுடு தலைமையில் இந்த கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது.
பட்ஜெட் தொடரின் இரண்டாவது அமர்வில் இன்று பெண்கள் தினத்தையொட்டி அவைத்தலைவர் மற்றும் உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்தனர். அப்போது பேசிய மாநிலங்களவை பாஜக பெண் எம்.பி. சோனல் மன்சிங், சர்வதேச ஆண்கள் தினமும் கொண்டாடப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
Related Tags :
Next Story