நாட்டில் இதுவரை 6.11 கோடி தடுப்பூசி போடப்பட்டுள்ளது


நாட்டில் இதுவரை 6.11 கோடி தடுப்பூசி போடப்பட்டுள்ளது
x
தினத்தந்தி 31 March 2021 2:29 AM IST (Updated: 31 March 2021 2:29 AM IST)
t-max-icont-min-icon

இதுவரை நாட்டில் 6 கோடியே 11 லட்சத்து 13 ஆயிரத்து 354 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

புதுடெல்லி, 

உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் 16-ந் தேதி தொடங்கியது. கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய 2 தடுப்பூசிகள் இந்தியாவில் அவசர கால பயன்பாட்டில் இருந்து வருகின்றன. நேற்று காலை 7 மணி நிலவரப்படி இதுவரை நாட்டில் 6 கோடியே 11 லட்சத்து 13 ஆயிரத்து 354 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

81 லட்சத்து 74 ஆயிரத்து 916 சுகாதார பணியாளர்களுக்கு முதல் டோஸ் தடுப்பூசியும், 51 லட்சத்து 88 ஆயிரத்து 747 சுகாதார பணியாளர்களுக்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசியும் போடப்பட்டுள்ளது.

இதே போன்று 89 லட்சத்து 44 ஆயிரத்து 742 முன்கள பணியாளர்களுக்கு முதல் டோஸ் தடுப்பூசியும், 37 லட்சத்து 11 ஆயிரத்து 221 முன் கள பணியாளர்களுக்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசியும் செலுத்தப்பட்


Next Story