மும்பையில் இதுவரை இல்லாத அளவில் புதிய உச்சம்; ஒரேநாளில் 8,626 பேருக்கு கொரோனா; தாராவியில் 71 பேருக்கு பாதிப்பு


மும்பையில் இதுவரை இல்லாத அளவில் புதிய உச்சம்; ஒரேநாளில் 8,626 பேருக்கு கொரோனா; தாராவியில் 71 பேருக்கு பாதிப்பு
x

மும்பையில் இதுவரை இல்லாத அளவில் புதிய உச்சமாக புதிதாக 8,626 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. தாராவியில் புதிதாக 71 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

8,626 பேருக்கு கொரோனா

மும்பையில் கொரோனா தொற்று பரவல் எண்ணிக்கை அசுர வேகத்தில் பரவி வருகிறது. இங்கு நேற்று புதிய உச்சமாக 8 ஆயிரத்து 646 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.கடந்த மாதம் 28-ந் தேதி 6 ஆயிரத்து 923 பேருக்கு தொற்று ஏற்பட்டதே அதிகப்பட்சமாக கருதப்பட்டது. அந்த எண்ணிக்கை தற்போது முறியடிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் இதுவரை இல்லாத அளவாக மும்பையில் நேற்று அதிகளவில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. இதன் காரணமாக இதுவரை பாதிப்பு எண்ணிக்கை 4 லட்சத்து 23 ஆயிரத்து 360 ஆக உயர்ந்தது.இதற்கிடையே கொரோனாவினால் சிகிச்சை முடிந்து நேற்று ஒரே நாளில் 5 ஆயிரத்து 31 பேர் வீட்டிற்கு அனுப்பப்பட்டனர். இதனால் வீடு திரும்பியோர் எண்ணிக்கை 3 லட்சத்து 55 ஆயிரத்து 691 ஆக உயர்ந்து உள்ளது. தற்போது 55 ஆயிரத்து 5 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

18 பேர் பலி

கொரோனாவினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 18 பேர் சிகிச்சை பலனின்றி பலியாகினர். இதனால் பலி எண்ணிக்கை 11 ஆயிரத்து 704 ஆக உயர்ந்தது. மும்பையில் கட்டுப்பாட்டு மண்டலமாக 80 இடங்கள் உள்ளன. மேலும் 650 கட்டிடங்கள் சீல் வைக்கப்பட்டு உள்ளது. நோயின் தாக்கம் இரட்டிப்பாகும் காலம் 49 நாட்களாக உள்ளது.

தாதரில் 104 பேருக்கு தொற்று

தாராவியில் புதிதாக 71 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதன் காரணமாக தாராவியில் தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 985 ஆக உயர்ந்தது. இதேபோல தாதரில் புதிதாக 104 பேருக்கும், மாகிமில் 101 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

மும்பையை தவிர புறநகர் பகுதிகளான வசாய்-விரார் மாநகராட்சியில் 325 பேருக்கும், கல்யாண்-டோம்பிவிலி மாநகராட்சியில் 898 பேருக்கும், தானே மாநகராட்சியில் புதிதாக 1,432 பேருக்கும் புதிதாக கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.


Next Story