சீனாவுக்கு ரூ.5¼ கோடி மயில் இறகுகள் கடத்த முயன்ற வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றம்


சீனாவுக்கு ரூ.5¼ கோடி மயில் இறகுகள் கடத்த முயன்ற வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றம்
x
தினத்தந்தி 2 April 2021 5:29 AM IST (Updated: 2 April 2021 5:29 AM IST)
t-max-icont-min-icon

சீனாவுக்கு ரூ.5¼ கோடி மயில் இறகுகள் கடத்த முயன்ற வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

வன விலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின்கீழ் மயில்கள் பாதுகாக்கப்பட்ட பறவை இனம் ஆகும். அவற்றை வேட்டையாடுவது குற்றம். அதையும் மீறி, டெல்லி சீலாம்பூரை சேர்ந்த ஒரு நிறுவனம், பிளாஸ்டிக் பைப்புகள் என்ற போர்வையில் மயில் இறகுகளை சீனாவுக்கு கடத்த முயன்றது. 

டெல்லி துக்ளகாபாத்தில் உள்ள சரக்கு பெட்டக கிடங்கில் 77 பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்த 2 ஆயிரத்து 565 கிலோ எடையுள்ள மயில் இறகுகளை சுங்க அதிகாரிகள் கைப்பற்றினர். அவற்றின் மதிப்பு ரூ.5 கோடியே 25 லட்சம் ஆகும். இதுதொடர்பாக அந்த நிறுவனம் மீதும், அதன் உரிமையாளர் அயஸ் அகமது மீதும் சுங்கத்துறை வழக்குப்பதிவு செய்திருந்தது.

இந்தநிலையில், இவ்வழக்கை சி.பி.ஐ. ஏற்றுக்கொண்டுள்ளது. மயில்களை வேட்டையாடாமல் இவ்வளவு அதிகமான இறகுகள் கிடைத்திருக்காது என்றும், மயில்களை வேட்டையாடியது கிரிமினல் குற்றம் என்றும் சி.பி.ஐ. அதிகாரி ஒருவர் கூறினாா். ஏற்கனவே, 6 மாதங்களில் பலதடவை மயில் இறகுகளை இந்த நிறுவனம் சீனாவுக்கு கடத்தி இருப்பதாகவும் அவர் கூறினார்.

Next Story