மராட்டியத்தில் மீண்டும் ஊரடங்கா? உத்தவ் தாக்கரே இன்று இரவு உரை
மராட்டியத்தில் நேற்று ஒருநாளில் மட்டும் 43, 183- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மும்பை,
மராட்டிய மாநிலத்தில் கொரோனா வைரஸ் கட்டுக்கடங்காமல் பரவுகிறது. குறிப்பாக மாநில தலைநகர் மும்பையில் தினம் தினம் புதிய உச்சத்தை கொரோனா வைரஸ் பாதிப்பு எட்டி வருகிறது. மும்பையில் நேற்று இதுவரை இல்லாத புதிய உச்சமாக 8,646- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.
கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த மாநிலத்தில் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கடுமையான கட்டுப்பாடுகளுடன் கூடிய முழு ஊரடங்கை அமல்படுத்துவது குறித்தும் மராட்டிய மாநில அரசு உத்தேசித்து வருகிறது. ஆனால், அரசின் இந்த திட்டத்துக்கு கடுமையான எதிர்ப்புகள் எழுந்து வருகின்றன. மராட்டியத்திலும் நேற்று ஒருநாள் பாதிப்பு 43 ஆயிரத்தை தாண்டி பதிவானது.
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியாமல் மராட்டிய மாநிலம் திணறி வருகிறது. இந்த நிலையில், இன்று இரவு 8.30 மணியளவில் உத்தவ் தாக்கரே மராட்டிய மக்களுக்கு உரையாற்றுகிறார். அப்போது, கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த என்ன மாதிரியான நடவடிக்கைகள் வரும் நாட்களில் எடுக்கப்படும் என்பது குறித்த அறிவிப்பை உத்தவ் தாக்கரே வெளியிட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. முன்னதாக மாலை 4.30 மணியளவில் உயர்மட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.
Related Tags :
Next Story