தேசிய செய்திகள்

இந்தியாவில் இதுவரை 7.59 கோடி ‘டோஸ்’ தடுப்பூசிகள் போடப்பட்டதாக தகவல் + "||" + It is reported that 7.59 crore dose vaccines have been administered in India so far

இந்தியாவில் இதுவரை 7.59 கோடி ‘டோஸ்’ தடுப்பூசிகள் போடப்பட்டதாக தகவல்

இந்தியாவில் இதுவரை 7.59 கோடி ‘டோஸ்’ தடுப்பூசிகள் போடப்பட்டதாக தகவல்
இந்தியாவில் இதுவரை 7.59 கோடி ‘டோஸ்’ தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு போடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசி திட்டம் கடந்த ஜனவரி மாதம் 16-ந் தேதி தொடங்கி தொடர்ந்து நடந்து வருகிறது. நேற்று காலை நிலவரப்படி 7 கோடியே 59 லட்சத்து 79 ஆயிரத்து 651 டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இதில் 43 சதவீத தடுப்பூசிகள் (3 கோடியே 33 லட்சத்து 10 ஆயிரத்து 437 தடுப்பூசிகள்) மராட்டியம், குஜராத், உத்தரபிரதேசம், ராஜஸ்தான் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய 5 மாநிலங்களில் மட்டுமே போடப்பட்டுள்ளன.

மராட்டிய மாநிலத்தில் இதுவரையில் 73 லட்சத்து 54 ஆயிரத்து 244 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இது மொத்த தடுப்பூசிகளில் 9.68 சதவீதம் ஆகும். அதற்கு அடுத்தபடியாக குஜராத்தில் 69 லட்சத்து 23 ஆயிரத்து 8 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

உத்தரபிரதேசத்தில் 66 லட்சத்து 43 ஆயிரத்து 96 தடுப்பூசிகளும், ராஜஸ்தானில் 64 லட்சத்து 31 ஆயிரத்து 601 தடுப்பூசிகளும், மேற்கு வங்காளத்தில் 59 லட்சத்து 58 ஆயிரத்து 488 தடுப்பூசிகளும் போடப்பட்டிருக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கலாம்: எய்ம்ஸ் தலைவர்
இந்தியாவில் கொரோனா பரவல் மீண்டும் உச்சத்தை எட்டியுள்ளது.
2. இந்தியாவில் இதுவரை இல்லாத கொரோனா பாதிப்பின் புதிய உச்சம்: புதிதாக 93,249 பேருக்கு தொற்று உறுதி
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 93,249 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. கொரோனா ஒருநாள் பாதிப்பு: உலக அளவில் இந்தியா முதல் இடம்
இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று மின்னல் வேகத்தில் பரவி வருகிறது.
4. இந்தியாவில் இதுவரை 7.3 கோடி கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல்
இந்தியாவில் இதுவரை 7.3 கோடி கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
5. கொரோனா தடுப்பூசி ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதா? வெளியுறவுத்துறை விளக்கம்
கொரோனா தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்வதற்கு தடை விதிக்கப்படவில்லை என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது