தேசிய செய்திகள்

பெங்களூருவில் கொரோனா கட்டுப்பாடுகள் தீவிரம்; விதிகளை மீறியவர்களிடம் ரூ.9.46 கோடி அபராதம் வசூல் + "||" + Intensification of corona restrictions in Bangalore; A fine of Rs 9.46 crore has been levied on violators

பெங்களூருவில் கொரோனா கட்டுப்பாடுகள் தீவிரம்; விதிகளை மீறியவர்களிடம் ரூ.9.46 கோடி அபராதம் வசூல்

பெங்களூருவில் கொரோனா கட்டுப்பாடுகள் தீவிரம்; விதிகளை மீறியவர்களிடம் ரூ.9.46 கோடி அபராதம் வசூல்
பெங்களூருவில் கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை மீறியவர்களிடமிருந்து ரூ.9.46 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு,

பெங்களூருவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில், கடந்த ஆண்டு (2020) முதல் தற்போது வரை பெங்களூருவில் கொரோனா விதிமுறைகளை மீறியவர்களிடம் இருந்து ரூ.9.46 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டு இருப்பதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, பெங்களூருவில் முகக்கவசம் அணியாமல் இருந்ததாக 3 லட்சத்து 75 ஆயிரத்து 917 பேர் சிக்கி இருப்பதாகவும், அவர்களிடம் இருந்து ரூ.8 கோடியே 90 லட்சத்து 68 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுபோல், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் இருந்ததாக 25 ஆயிரத்து 73 பேர் சிக்கி இருப்பதும், அவர்களிடம் இருந்து ரூ.55 லட்சத்து 95 ஆயிரமும் அபராதம் வசூலிக்கப்பட்டு இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. பெங்களூருவில் 6 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைனில் வகுப்புகளை எடுக்கலாம் - பள்ளி கல்வித்துறை உத்தரவு
பெங்களூருவில் 6 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைனில் வகுப்புகளை எடுக்கலாம் என்று பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
2. கொரோனா பரவல் அதிகரிப்பு எதிரொலி: பெங்களூரு சர்வதேச திரைப்பட விழா ஒத்திவைப்பு
கொரோனா பரவல் அதிகரிப்பு எதிரொலியாக, பெங்களூரு சர்வதேச திரைப்பட விழா ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.
3. பெங்களூருவில் ரூ.37 கோடி அரசு நிலம் மீட்பு - கர்நாடக அரசு நடவடிக்கை
கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவின்படி பெங்களூருவில் உள்ள ஆக்கிரமிப்பு நிலங்களை அரசு அதிகாரிகள் மீட்டு வருகிறார்கள்.
4. பெங்களூரு விதான சவுதாவில் கர்நாடக சட்டசபை கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது
பெங்களூரு விதான சவுதாவில் கர்நாடக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது.
5. வாகனம், தொழிற்சாலைகள் பெருக்கம் எதிரொலி; பெங்களூருவில் அதிகரித்து வரும் நச்சுப்புகை
இந்தியாவில் வளர்ந்து வரும் நகரங்களில் பெங்களூரு மாநகரமும் ஒன்றாகும்.