திரிபுரா முதல்வர் பிப்லாப் குமாருக்கு கொரோனா


திரிபுரா முதல்வர் பிப்லாப் குமாருக்கு கொரோனா
x
தினத்தந்தி 7 April 2021 1:53 PM IST (Updated: 7 April 2021 1:53 PM IST)
t-max-icont-min-icon

திரிபுரா முதல்வர் பிப்லாப் குமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அகர்தலா,

இந்தியாவில் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனாவின் 2வது அலை காரணமாக, பல்வேறு மாநிலங்களில் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், தடுப்பூசி செலுத்திக் கொள்ள மக்கள் அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்.

இதற்கிடையில் சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள் என பலரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது திரிபுரா முதல்வர் பிப்லாப் குமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்த தகவலை பிப்லாப் குமார் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மருத்துவர்களின் ஆலோசனையின்படி நான் வீட்டில் என்னை தனிமைப்படுத்தியுள்ளேன். தயவுசெய்து கொரோனா விதிமுறைகளை பின்பற்றி பாதுகாப்பாக இருக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

Next Story