டெல்லியில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: புதிதாக 5,506 பேருக்கு தொற்று உறுதி
டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 5,506 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
டெல்லியில் கடந்த சில மாதங்களாக குறைந்து வந்த கொரோனா பாதிப்பு, தற்போது கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், டெல்லி சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, டெல்லியில் அதிகபட்ச அளவாக இன்று மேலும் 5,506 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6,90,568 ஆக அதிகரித்துள்ளது.
இன்று ஒரேநாளில் மாநிலத்தில் 20 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11,133 ஆக உயர்ந்துள்ளது.
மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 3,363 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 6,59,980 ஆக உயர்ந்துள்ளது. டெல்லியில் தற்போது 19,455 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக டெல்லி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story