ஏப்ரல் 11ம் தேதி மாலை 6 மணிக்கு மேல் இலவச தரிசனம் ரத்து - திருப்பதி கோயில் தேவஸ்தானம் அறிவிப்பு
ஏப்ரல் 11ம் தேதி மாலை 6 மணிக்கு மேல் இலவச தரிசனம் ரத்து செய்யப்படுவதாக திருப்பதி கோயில் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
திருமலை,
ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் திருக்கோவிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.
கடந்த ஆண்டு பரவிய கொரோனா வைரஸ் பாதிப்பு, திருப்பதியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கொரோனா பாதிப்பு குறைந்ததால் அனைத்தும் இயல்பு நிலைக்கு திரும்பியது.
இந்நிலையில் ஏப்ரல் 11ம் தேதி மாலை 6 மணிக்கு மேல் இலவச தரிசனம் ரத்து செய்யப்படுவதாக திருப்பதி கோயில் தேவஸ்தானம் அறிவித்துள்ளது. கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் திருப்பதி கோயில் தேவஸ்தானம் இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.
Related Tags :
Next Story