மத்திய பிரதேசத்தில் இன்று புதிதாக 4,043 பேருக்கு கொரோனா பாதிப்பு


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 7 April 2021 9:20 PM IST (Updated: 7 April 2021 9:20 PM IST)
t-max-icont-min-icon

மத்திய பிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 4,043 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

போபால்,

மத்திய பிரதேசத்தில் கடந்த சில மாதங்களாக குறைந்து வந்த கொரோனா பாதிப்பு, தற்போது கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், மத்திய பிரதேச சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, மத்திய பிரதேசத்தில் இன்று மேலும் 4,043 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,18,014 ஆக அதிகரித்துள்ளது.

இன்று ஒரேநாளில் மாநிலத்தில் 13 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,086 ஆக உயர்ந்துள்ளது.

மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 2,126 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2,87,869 ஆக உயர்ந்துள்ளது. மத்திய பிரதேசத்தில் தற்போது 26,059 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக மத்திய பிரதேச சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Next Story