பஞ்சாப் மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,997 பேருக்கு கொரோனா பாதிப்பு


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 7 April 2021 10:57 PM IST (Updated: 7 April 2021 10:57 PM IST)
t-max-icont-min-icon

பஞ்சாப் மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,997 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

சண்டிகர், 

பஞ்சாப் மாநிலத்தில் முதலில் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு தற்போது கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை தடுக்க மகாராஷ்டிரா, டெல்லி, குஜராத்தை தொடர்ந்து பஞ்சாப் மாநிலமும் இரவு நேர பொதுமுடக்கத்தை அறிவித்துள்ளது.

இதன்படி பஞ்சாபில் வரும் 30-ஆம் தேதி வரை இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை பொது முடக்கம் அமலில் இருக்கும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், பஞ்சாப் சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, மாநிலத்தில் இன்று மேலும் 2,997 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,60,020 ஆக அதிகரித்துள்ளது.

இன்று ஒரேநாளில் மாநிலத்தில் 63 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7,278 ஆக உயர்ந்துள்ளது.

மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 2,959 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 2,26,887 ஆக உயர்ந்துள்ளது. பஞ்சாபில் தற்போது 25,855 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக பஞ்சாப் மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது

முன்னதாக பஞ்சாபில் ஏற்பட்டுள்ள தொற்றுகளில் 80% வேகமாக பரவும் இங்கிலாந்து வகை உருமாற்ற வைரசால் ஏற்பட்டவை என்று மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷ் வர்தன் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story