சிபிஐ விசாரணைக்கு எதிராக முன்னாள் உள்துறை மந்திரி அனில் தேஷ்முக் தாக்கல் செய்த மனு - சுப்ரீம்கோர்ட்டு தள்ளுபடி


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 8 April 2021 4:44 PM IST (Updated: 8 April 2021 4:44 PM IST)
t-max-icont-min-icon

சிபிஐ விசாரணைக்கு எதிராக, முன்னாள் உள்துறை மந்திரி அனில் தேஷ்முக் தாக்கல் செய்த மனுவை சுப்ரீம்கோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது.

மும்பை,

மராட்டிய மாநில முதல்-மந்திர் உத்தவ் தாக்கரே தலைமையிலான, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இங்கு, மும்பை போலீஸ் கமிஷனர் பதவியிலிருந்து பணியிட மாற்றம் செய்யப்பட்ட பரம்வீர் சிங், உள்துறை மந்திரியாக இருந்த, தேசியவாத காங்., கட்சியைச் சேர்ந்த அனில் தேஷ்முக் மீது, சமீபத்தில் ஊழல் புகார் கூறினார்.

இதனைத்தொடர்ந்து மாதந்தோறும் ரூ.100 கோடி மாமூல் கேட்டு போலீசாரை கட்டாயப்படுத்தியது உள்ளிட்ட முறைகேடுகள் தொடர்பான புகார்களில் உள்துறை மந்திரி அனில் தேஷ்முக் மீது சி.பி.ஐ. விசாரணை நடத்த ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து அனில் தேஷ்முக் தனது பதவியை ராஜினாமா செய்தார் 

இந்த சூழலில் மும்பை ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்து சுப்ரீம்கோர்டில் மராட்டிய அரசும், அனில் தேஷ்முக்கும் மேல்முறையீடு மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு நீதிபதிகள் சஞ்சய் கவுல், ஹேமந்த் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணை வந்தது. 

இந்நிலையில் சிபிஐ விசாரணைக்கு எதிராக, முன்னாள் உள்துறை மந்திரி அனில் தேஷ்முக் தாக்கல் செய்த மனுவை சுப்ரீம்கோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது. 

Next Story