உத்திர பிரதேசத்தில் புதிதாக 8,490 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 39 பேர் பலி


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 8 April 2021 8:28 PM IST (Updated: 8 April 2021 8:28 PM IST)
t-max-icont-min-icon

உத்திர பிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 8,490 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

லக்னோ,

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. இதன்படி உத்திர பிரதேச மாநிலத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக மீரட், காசியாபாத், நொய்டா மற்றும் பரேலி ஆகிய பகுதிகளில் இரவு நேர ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் உத்திர பிரதேச சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, மாநிலத்தில் இன்று 8,490 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6,54,404 ஆக அதிகரித்துள்ளது.

இன்று ஒரேநாளில் மாநிலத்தில் 39 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9,003 ஆக உயர்ந்துள்ளது.

மாநிலத்தில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 6,03,063 ஆக உயர்ந்துள்ளது. உத்திர பிரதேசத்தில் தற்போது 39,338 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாகவும், மாநிலத்தில் இதுவரை 3.61 கோடி பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் உத்திர பிரதேச சுகாதார துணை செயலாளர் அமித் மோகன் பிரசாத் தெரிவித்துள்ளார்.

Next Story