தேசிய செய்திகள்

கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் விரைவில் பூரண நலம்பெற விழைகிறேன் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் + "||" + Kerala First Minister Binarayi Vijayan wants to get well soon - DMK leader MK Stalin

கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் விரைவில் பூரண நலம்பெற விழைகிறேன் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் விரைவில் பூரண நலம்பெற விழைகிறேன் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் விரைவில் பூரண நலம்பெற வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை, 

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. தொற்று பரவலைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும் தொற்று எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்கும் முதல் 5 மாநிலங்களில் கேரளா தற்போது 2-வது இடத்தில் இருக்கிறது.

இந்த சூழலில் கேரள மாநில முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரது மகளுக்கு கடந்த 6ஆம் தேதி கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் தற்போது பினராயி விஜயனுக்கும் தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் விரைவில் பூரண நலம்பெற வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், “கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருப்பது அறிந்து வருத்தமுற்றேன். அவர் விரைந்து பூரண நலம் பெற விழைகிறேன். பொதுவாழ்வில் ஈடுபட்டுள்ளோர் அனைவரும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்று மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.  
தொடர்புடைய செய்திகள்

1. மதசார்பற்ற தன்மை காரணமாக கேரள மாநிலம் பா.ஜனதா வளர ஏற்ற வளமான மண் அல்ல; முதல்-மந்திரி பினராயி விஜயன்
மதசார்பற்ற தன்மை காரணமாக கேரள மாநிலம் பா.ஜனதா வளருவதற்கு ஏற்ற வளமான மண் அல்ல என முதல்-மந்திரி பினராயி விஜயன் கூறியுள்ளார்.
2. அமித்ஷாவிடம் இருந்து பாடம் கற்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை: பினராயி விஜயன் பதிலடி
கேரள சட்டமன்றத்துக்கு வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்க உள்ளது.
3. கேரளாவில் தியேட்டர் உரிமையாளர்களுக்கு சிறப்பு சலுகை; முதல்-மந்திரி பினராயி விஜயன் அறிவிப்பு
கேரளாவில் தியேட்டர் உரிமையாளர்களுக்கு 3 மாத கேளிக்கை வரி ரத்து உள்பட பல சிறப்பு சலுகைகளை முதல்-மந்திரி பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.
4. கேரள தங்க கடத்தல் விவகாரம் - பினராயி விஜயன் பதவி விலக எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்
கேரள தங்க கடத்தல் விவகாரம் பூதாகரம் ஆகியுள்ள நிலையில், அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கி உள்ளன
5. காட்டுத்தீ போல பரவுகிறது கொரோனா வைரஸ்- கேரள முதல்வர் பினராயி விஜயன் வேதனை
கேரளாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 7 ஆயிரத்து 482 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.