சடலங்கள் மீது பாஜக அரசியல் செய்கிறது - ம.பி. முன்னாள் முதல்மந்திரி கடும் விமர்சனம்

சடலங்கள் மீது பாஜக அரசியல் செய்வதாக மத்தியபிரதேச முன்னாள் முதல்மந்திரி கமல்நாத் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
போபால்,
இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை மிகவும் தீவிரமடைந்து வருகிறது. பல்வேறு மாநிலங்களில் உள்ள மருத்துவமனைகளில் படுக்கை வசதி, ஆக்சிஜன், தடுப்பூசி, மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது.
இதற்கிடையில், கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதில் தவறிவிட்டதாக பாஜக அரசு மீது எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன.
இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவரும், மத்தியபிரதேச முன்னாள் முதல்மந்திரியுமான கமல்நாத் இன்று கூறுகையில்,
மத்தியபிரதேசத்தில் உள்ள மருத்துவமனைகளில் மருந்து, தடுப்பூசி, ஆக்சிஜன், ஆபுலன்ஸ், படுக்கை வசதி என எதுவும் இல்லை. ஆனால், மாநில முதல்மந்திரி (சிவராஜ்சிங் சௌகான் - பாஜக) அனைத்தும் போதுமான அளவில் உள்ளது என்று கூறுகிறார். கொரோனாவின் இரண்டாவது அலை குறித்து தேசிய மற்றும் சர்வதேச ஊடகங்கள் கடந்த 3 மாதங்களாக எச்சரிக்கை விடுத்து வந்தன.
சடலங்கள் மீது பாஜக அரசியல் செய்கிறது. உண்மையை மறைப்பதன் மூலம் கொரோனாவை தடுத்து விடலாம் என்று அவர்கள் (பாஜக அரசு) நினைக்கிறார்கள். ஆனால், அது நடக்காது. ஹெலிகாப்பரை எடுத்துக்கொண்டு ஒவ்வொரு மாவட்டத்திற்கு சென்று பார்வையிட வேண்டும் என முதல்மந்திரிக்கு நான் அறிவுரை வழங்குகிறேன். எனது திறனுக்கு ஏற்ப எனது முழு ஆதரவையும் வழங்குவேன். மத்தியபிரதேசத்திற்கு வழங்கும் தடுப்பூசியை அதிகரிக்க தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்களுடன் நான் பேசியுள்ளேன்’ என்றார்.
Related Tags :
Next Story