ஆக்சிஜன் சிலிண்டர் என கூறி பெண்ணிடம் தீயணைப்பு கருவி விற்பனை

டெல்லியில் ஆக்சிஜன் சிலிண்டர் என கூறி தீயணைப்பு கருவியை விற்பனை செய்து பெண்ணை ஏமாற்றிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
புதுடெல்லி,
டெல்லியின் கொரோனா பாதித்த தனது உறவினர் ஒருவருக்கு வழங்குவதற்காக பிந்தாப்பூர் பகுதியில் வசித்து வரும் கீதோ அரோரா என்ற பெண்ணுக்கு ஆக்சிஜன் சிலிண்டர் தேவைப்பட்டு உள்ளது. நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வரும் சூழலில் ஆக்சிஜன் சிலிண்டர் தேவையும் அதிகரித்து உள்ளது.
இதனால் பல இடங்களில் ஆக்சிஜன் சிலிண்டர் கிடைக்காமல் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது. இந்நிலையில், ஆக்சிஜன் சிலிண்டர் என கூறி அவரை 2 பேர் மோசடி செய்துள்ளனர். இதுபற்றி அரோரா அளித்துள்ள புகாரில், ஆக்சிஜன் சிலிண்டர் என கூறி தீயணைப்பு கருவியை விற்பனை செய்து என்னை ஏமாற்றி விட்டனர் என தெரிவித்து உள்ளார்.
இதனை தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு 2 பேரை கைது செய்துள்ளனர். அவர்கள் இருவரும் விகாஸ் புரி பகுதியை சேர்ந்த அஷுதோஷ் மற்றும் ஆயுஷ் என தெரிய வந்துள்ளது. அவர்களிடம் இருந்து 5 தீயணைப்பு கருவிகளையும் பறிமுதல் செய்துள்ளனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரண நடந்து வருகிறது.
Related Tags :
Next Story