தேசிய செய்திகள்

கேரள மாநிலத்தில் மே 4 முதல் 9 வரை கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் - பினராயி விஜயன் அறிவிப்பு + "||" + Strict restrictions will be imposed in the state of Kerala from May 4 to 9 - Binarayi Vijayan announcement

கேரள மாநிலத்தில் மே 4 முதல் 9 வரை கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் - பினராயி விஜயன் அறிவிப்பு

கேரள மாநிலத்தில் மே 4 முதல் 9 வரை கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் - பினராயி விஜயன் அறிவிப்பு
கேரளாவில் கொரோனா பரவல் காரணமாக மே 4 முதல் 9 ஆம் தேதி வரை கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரம்,

நாடு முழுவதும் கொரோனா தொற்றின் 2வது அலை மிகத் தீவிரமாக பரவி வரும் நிலையில், கேரளாவில் ஒரே நாளில் மேலும் 38,607 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. கேரள மாநிலத்தில் கொரோனா தொற்று பரவல் கடந்த சில தினங்களாக அதிகரித்து வருவதால், அதனை கட்டுப்படுத்த அந்த மாநில் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை ஒட்டி, தேர்தல் கொண்டாட்டங்கள் தவிர்க்கப்பட வேண்டும் என மக்களைக் கேட்டுக் கொண்டார். கொரோனா பரவலைக் கருத்தில் கொண்டு, மாநிலத்தில் மே 4 முதல் 9 ஆம் தேதி வரை கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்றும், இதுதொடர்பான அறிவிப்புகள் பின்னர் வெளியிடப்படும் என்றும் அவர் அறிவித்தார். 

மேலும், கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் சிலிண்டர் கிடைப்பதை உறுதி செய்ய, அனைத்து விதமான பணிகளும் நடந்து வருவதாக குறிப்பிட்ட பினராயி விஜயன், மாநிலத்தில் புதிய ஆக்சிஜன் ஆலை அமைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.