கொரோனாவுக்கு 4 கைதிகள் பலி: அச்சம் தெரிவித்து திகார் சிறை நிர்வாகம் அரசுக்கு கடிதம்

கொரோனா உயர்வு எதிரொலியாக கைதிகளை பரோலில் விட வேண்டும் என டெல்லி திகார் சிறை நிர்வாகம் அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது.
புதுடெல்லி,
நாடு முழுவதும் கொரோனாவின் 2வது அலையின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் பாதிப்புகள் டெல்லி திகார் சிறையையும் விட்டு வைக்கவில்லை. சமீபத்தில் 4 கைதிகள் கொரோனாவுக்கு உயிரிழந்து உள்ளனர்.
இதனால் அச்சமடைந்துள்ள சிறை நிர்வாகம் டெல்லி அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது. அதில், கொரோனாவின் 2வது அலையில் 4 கைதிகள் உயிரிழந்து விட்டனர். அதனால் நாங்கள் சில நாட்களுக்கு முன் அரசுக்கு கடிதம் எழுதியுள்ளோம். அதன் மீது முடிவெடுப்பது அரசின் பரிசீலனையிலேயே உள்ளது என அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
அதேவேளையில், கொரோனா பெருந்தொற்றை முன்னிட்டு விசாரணை கைதி மற்றும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட கைதிகள் ஆகிய அனைவரையும் உடனடியாக விடுவிக்க கோரிய மனு மீது கடந்த புதன்கிழமை டெல்லி ஐகோர்ட்டு நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளது. இந்த விவகாரம் வருகிற மே 4ந்தேதி விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படுகிறது.
Related Tags :
Next Story