கொரோனா பரவல்: மத்திய மந்திரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை


கொரோனா பரவல்: மத்திய மந்திரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை
x
தினத்தந்தி 30 April 2021 6:56 PM IST (Updated: 30 April 2021 6:56 PM IST)
t-max-icont-min-icon

நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் சூழ்நிலையில் மத்திய மந்திரிகளுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்தினார்.

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை தீவிரமடைந்து வருகிறது. நாடு முழுவதும் நேற்று ஒரேநாளில் 3 லட்சத்து 86 ஆயிரத்து 452 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், இந்தியாவில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 1 கோடியே 87 லட்சத்து 62 ஆயிரத்து 976 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 31 லட்சத்து 70 ஆயிரத்து 228 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கிடையில், நாடு முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 1 கோடியே 53 லட்சத்து 84 ஆயிரத்து 418 பேர் குணமடைந்துள்ளனர். இந்தியாவில் கொரோனாவால் இதுவரை 2 லட்சத்து 8 ஆயிரத்து 330 பேர் உயிரிழந்துள்ளனர்.

வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில், கொரோனாவின் இரண்டாவது அலையால் நாடு சந்தித்து வரும் மோசமான சூழல் மற்றும் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு எடுக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து மத்திய மந்திரிகளுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்தினார். 

இந்த ஆலோசனை கூட்டத்தில், நிலைமையை சமாளிக்க அரசாங்கத்தின் அனைத்து ஆயுதங்களும் ஒற்றுமையாகவும் விரைவாகவும் செயல்பட்டு வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

Next Story