தேசிய செய்திகள்

5 மாநில சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை; தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் இந்திய தேர்தல் ஆணையர் ஆலோசனை + "||" + 5 State Assembly election vote count; Sushil Chandra consults with Chief Electoral Officers

5 மாநில சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை; தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் இந்திய தேர்தல் ஆணையர் ஆலோசனை

5 மாநில சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை; தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் இந்திய தேர்தல் ஆணையர் ஆலோசனை
5 மாநில சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் இந்திய தேர்தல் ஆணையர் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
புதுடெல்லி,

தமிழகம், புதுச்சேரி, கேரளம், மேற்கு வங்காளம் மற்றும் அசாம் ஆகிய 5 மாநிலங்களிலும் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்பட உள்ளன.  இதனை முன்னிட்டு 5 மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் இந்திய தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு 5 மாநிலங்களிலும் தேர்தல் வெற்றியை கொண்டாட தேர்தல் ஆணையம் முன்பே தடை விதித்துள்ளது.   தடை உத்தரவை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வாக்கு எண்ணிக்கையின் போக்கைக்கண்டு, வெற்றி பெற்றுவிடுவோம் என்ற நம்பிக்கை வந்து விட்டாலே அரசியல் கட்சித்தொண்டர்கள் கட்சி அலுவலகங்களிலும், பொது இடங்களிலும் கூடி 
பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும், ஆடிப்பாடியும் வெற்றி கொண்டாட்டங்களை தொடங்கி விடுவார்கள்.

ஆனால் கொரோனா வைரஸ் பெருந்தொற்றும், அதையொட்டி போடப்பட்டுள்ள ஊரடங்குகள், கட்டுப்பாடுகள் இதற்கு பெரும் தடையாக அமைந்துவிட்டன.  வாக்கு எண்ணிக்கை நாளில் வெற்றி கொண்டாட்டங்களுக்கு, ஊர்வலங்களுக்கு தேர்தல் கமிஷன் அதிரடியாக தடை விதித்துள்ளது.

கொரோனா பாதிப்பு உள்ள சூழலில், வாக்கு எண்ணிக்கை மையங்களில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை சரியாக பின்பற்றுவது, முக கவசங்கள், சானிட்டைசர்கள் உள்ளிட்டவற்றை உபயோகிப்பது போன்ற தடுப்பு நடவடிக்கைகளையும் முறையாக பின்பற்றுவது, போதிய போலீஸ் பாதுகாப்பு உள்ளிட்ட பிற விசயங்களும் இந்த ஆலோசனையில் இடம் பெறுகின்றன.


தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் ஊரடங்கில் மேலும் தளர்வுகள்: அதிகாரிகளுடன் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை
தமிழக அரசின் உயர் அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்துகிறார்.
2. கொரோனா பரவல் அளவின்படி மாவட்ட வாரியாக ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்படுமா? மு.க.ஸ்டாலின் தலைமையில் அதிகாரிகள் ஆலோசனை
தமிழகத்தில் ஜூன் 7-ந் தேதியுடன் முழு ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், ஊரடங்கு உத்தரவை மேலும் நீட்டிக்கலாமா? பரவல் குறைந்துள்ள மாவட்டங்களில் தளர்வுகளை அனுமதிக்கலாமா? என்பது பற்றி உயர் அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டார்.
3. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள 6 மாவட்ட கலெக்டர்களுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள, 6 மாவட்ட கலெக்டர்களுடன் நேற்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக்காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.
4. பிளஸ்-2 தேர்வு குறித்து விரைவில் முடிவு: மத்திய கல்வி மந்திரி அறிவிப்பு
பிளஸ்-2 தேர்வு குறித்து விரைவில் முடிவு செய்யப்படும் என்று மாநிலங்களுடன் ஆலோசனை நடத்திய பின்னர் மத்திய கல்வி மந்திரி தெரிவித்தார்.
5. கொரோனா சூழல்: நாடு முழுவதும் உள்ள டாக்டர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை
கொரோனா சூழலை எதிர்கொள்ள நாடு முழுவதும் உள்ள டாக்டர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை மேற்கொண்டார்.