இன்று முதல் அரியானாவில் 7 நாள் முழு ஊரடங்கு அமல்


இன்று முதல் அரியானாவில் 7 நாள் முழு ஊரடங்கு அமல்
x
தினத்தந்தி 3 May 2021 2:53 AM IST (Updated: 3 May 2021 2:53 AM IST)
t-max-icont-min-icon

அரியானா மாநிலத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 13 ஆயிரத்து 588 ஆக உயர்ந்துள்ளது. 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 125 ஆக அதிகரித்துள்ளது.

எனவே, கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கத்தில், அம்மாநில அரசு 7 நாள் முழு ஊரடங்கை அறிவித்துள்ளது. இந்த ஊரடங்கு இன்று (திங்கட்கிழமை) அமலுக்கு வருவதாக மாநில சுகாதாரத்துறை மந்திரி அனில் விஜ் தெரிவித்துள்ளார்.


Next Story