தேசிய செய்திகள்

மும்பையில் புதிதாக 3 ஆயிரத்து 879 பேருக்கு கொரோனா பாதிப்பு + "||" + Corona affects 3,879 new people in Mumbai

மும்பையில் புதிதாக 3 ஆயிரத்து 879 பேருக்கு கொரோனா பாதிப்பு

மும்பையில் புதிதாக 3 ஆயிரத்து 879 பேருக்கு கொரோனா  பாதிப்பு
மும்பையில் புதிதாக 3 ஆயிரத்து 879 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

3,879 பேர் பாதிப்பு

தலைநகா் மும்பையில் ஏப்ரல் மாதம் தினந்தோறும் 7 ஆயிரம் முதல் 10 ஆயிரம் பேர் வரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வந்தனர். இந்தநிலையில் கடந்த சில நாட்களாக மும்பையில் பாதிப்பு குறைந்து வருகிறது. இதில் நேற்று நகரில் மேலும் 3 ஆயிரத்து 879 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 6 லட்சத்து 65 ஆயிரத்து 299 ஆக உயர்ந்து உள்ளது.

77 ேபர் பலி

இதேபோல நகரில் மேலும் 77 பேர் ஆட்கொல்லி நோய்க்கு பலியானார்கள். இதுவரை நகரில் 13 ஆயிரத்து 547 பேர் உயிரிழந்து உள்ளனர். நகரில் நோய் பரவல் இரட்டிப்பாகும் காலம் 123 நாட்களாக உயர்ந்து உள்ளது. மேலும் தொற்று பாதித்தவர்களில் 90 சதவீதம் பேர் குணமாகி உள்ளனர். தற்போது நகரில் 102 கட்டுபாட்டு மண்டலங்கள் உள்ளது. 728 கட்டிடங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. மும்பையில் பா.ஜனதா, சிவசேனா தொண்டர்கள் இடையே கடும் மோதல்
ராமர் கோவிலுக்கு நிலம் வாங்கியதில் நடந்ததாக கூறப்படும் முறைகேடு தொடர்பாக மும்பையில் பா.ஜனதா, சிவசேனா தொண்டர்கள் கடுமையாக மோதிக்கொண்டனர்.
2. மும்பையில் பலத்த மழை- கடும் போக்குவரத்து நெரிசல்
மும்பையில் நேற்று அதிகாலை இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
3. மும்பை, தானே நகரங்களில் பரவலாக மழை
மராட்டியத்தில் கடந்த 9 ஆம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கியது.
4. மும்பையில் திடீரென உருவான பள்ளத்தில் விழுந்து மாயமான கார்; சமூகவலைதளத்தில் பரவிய வீடியோவால் பரபரப்பு
மும்பையில் திடீரென உருவான பள்ளத்தில் விழுந்து கார் மாயமாவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
5. மும்பையில் இருந்து சென்னைக்கு 14,420 கோவிஷீல்டு தடுப்பூசிகள் வருகை
மும்பையில் இருந்து சென்னைக்கு 14,420 கோவிஷீல்டு தடுப்பூசிகள் வந்தடைந்தன.