மராட்டியத்தில் மேலும் 920 பேர் கொரோனாவுக்கு பலி


மராட்டியத்தில் மேலும் 920 பேர் கொரோனாவுக்கு பலி
x
தினத்தந்தி 6 May 2021 8:26 AM IST (Updated: 6 May 2021 8:26 AM IST)
t-max-icont-min-icon

மராட்டியத்தில் மேலும் 920 போ் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.

57,640 பேர்

மராட்டியத்தில் 2-வது கொரோனா அலை வீசி வருகிறது. இதில் நோய் தொற்று அசுர வேகத்தில் பரவி வருகிறது. நேற்று மாநிலத்தில் புதிதாக 57 ஆயிரத்து 640 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 48 லட்சத்து 80 ஆயிரத்து 542 ஆக உயர்ந்து உள்ளது.இதில் 41 லட்சத்து 64 ஆயிரத்து 98 பேர் குணமாகி உள்ளனர். நேற்று மட்டும் 57 ஆயிரத்து 6 பேர் குணமாகினர்.

920 பேர் பலி

மாநிலத்தில் ெதாற்றுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று புதிதாக 920 பேர் பலியாகினர். இதுவரை மாநிலத்தில் 72 ஆயிரத்து 662 பேர் உயிரிழந்து உள்ளனர்.

மாநிலம் முழுவதும் தற்போது 6 லட்சத்து 41 ஆயிரத்து 569 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 38 லட்சத்து 52 ஆயிரத்து 501 பேர் வீடுகளிலும், 32 ஆயிரத்து 174 பேர் தனிமை மையங்களிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மாநிலத்தில் தொற்று பாதித்தவர்களில் 85.32 சதவீதம் பேர் குணமடைந்து உள்ளனர். 1.49 விகிதம் பேர் உயிரிழந்து உள்ளனர்.


Next Story