மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் 60 ஆயிரத்தை தாண்டியது; 853 பேர் பலி
மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் 60 ஆயிரத்தை தாண்டி உள்ளது. 853 பேர் உயிரிழந்தனர்.
60 ஆயிரத்தை தாண்டியது
மராட்டியத்தில் தொடர்ந்து 4 நாட்களாக நோய் பாதிப்பு 60 ஆயிரத்திற்கும் குறைவாகவே இருந்தது. இந்தநிலையில் மாநிலத்தில் நேற்று மீண்டும் பாதிப்பு 60 ஆயிரத்தை தாண்டி உள்ளது. புதிதாக மாநிலத்தில் 62 ஆயிரத்து 194 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 49 லட்சத்து 42 ஆயிரத்து 736 ஆக உயர்ந்து உள்ளது.
இதில் நேற்று 63 ஆயிரத்து 842 பேர் குணமாகினர். இதுவரை 42 லட்சத்து 27 ஆயிரத்து 940 பேர் குணமடைந்து உள்ளனர். தற்போது மாநிலம் முழுவதும் 6 லட்சத்து 39 ஆயிரத்து 75 பேர் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 38 லட்சத்து 26 ஆயிரத்து 89 பேர் வீடுகளிலும், 29 ஆயிரத்து 406 பேர் தனிமை மையங்களிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதேபோல மாநிலத்தில் மேலும் 853 பேர் ஆட்கொல்லி நோய்க்கு பலியானார்கள். இதுவரை 73 ஆயிரத்து 515 பேருக்கு வைரஸ் நோய்க்கு உயிரிழந்து உள்ளனர். மாநிலத்தில் தொற்று பாதித்தவர்களில் 85.54 சதவீதம் பேர் குணமடைந்து உள்ளனர்.
மும்பையில் குறைகிறதுதலைநகர் மும்பையில் பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. நேற்று நகரில் சோதனை செய்யப்பட்ட 30 ஆயிரத்து 942 பேரில் 3 ஆயிரத்து 56 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதனால் நகரில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 6 லட்சத்து 68 ஆயிரத்து 355 ஆக உயர்ந்து உள்ளது. இதேபோல மேலும் 69 பேர் பலியானதால், தொற்றுக்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 13 ஆயிரத்து 616 ஆக உயர்ந்து உள்ளது.
நகரில் நோய் பரவல் இரட்டிப்பாகும் காலம் 130 நாட்களாக உயர்ந்து உள்ளது. மேலும் தொற்று பாதித்தவர்களில் 90 சதவீதம் பேர் குணமடைந்து உள்ளனர்.