உத்தரபிரதேசம் சிங்கங்கள் சரணாலயத்தில் உள்ள பெண் சிங்கத்துக்கு கொரோனா
உத்தரபிரதேசத்தில் உள்ள சிங்கங்கள் சரணாலயத்தில் ஒரு பெண் சிங்கத்துக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
லக்னோ,
நாடு முழுவதும் கொரோனா தொற்றின் 2வது அலை காரணமாக மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வரும் நிலையில், விலங்குகளுக்கும் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்படும் சம்பவங்கள் அண்மைக் காலமாக நிகழ்ந்து வருகின்றன.
அந்த வகையில் ஐதராபாத்தில் உள்ள உயிரியல் பூங்காவில் சமீபத்தில் 8 ஆசிய சிங்கங்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக அதிர்ச்சித்தகவல் வெளியானது. இந்த நிலையில் உத்தரபிரதேசத்தில் பெண் சிங்கத்துக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி இருக்கும் தகவல் மேலும் அதிர்ச்சியைத் தந்துள்ளது.
அங்கு எட்டவாவில் உள்ள சிங்கங்கள் சரணாலயத்தில் 2 சிங்கங்களின் உடல்நிலை பாதித்தது. இதையடுத்து அங்குள்ள 14 சிங்கங்களின் மாதிரிகளை சேகரித்து பரேலியில் உள்ள பரிசோதனைக்கூடத்துக்கு அனுப்பி வைத்தனர். அவற்றில் ஒரு பெண் சிங்கத்துக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
Related Tags :
Next Story