மும்பை தாக்குதலின் போது தேசிய பாதுகாப்பு படைக்கு தலைமை தாங்கிய அதிகாரி கொரோனாவால் உயிரிழப்பு


மும்பை தாக்குதலின் போது தேசிய பாதுகாப்பு படைக்கு தலைமை தாங்கிய அதிகாரி கொரோனாவால் உயிரிழப்பு
x
தினத்தந்தி 20 May 2021 11:24 AM IST (Updated: 20 May 2021 11:24 AM IST)
t-max-icont-min-icon

மும்பை தாக்குதலில் போது பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட தேசிய பாதுகாப்பு படைக்கு தலைமை தாங்கிய அதிகாரி கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார்.

புதுடெல்லி,

பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் லஷ்கர்-இ-தொய்பா என்ற பயங்கரவாத அமைப்பினர் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் 2008 ஆம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி தொடர் குண்டுவெடிப்பு மற்றும் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலில் பொதுமக்கள், பாதுகாப்பு படையினர் உள்பட 163 பேர் உயிரிழந்தனர். தாக்குதலில் ஈடுபட்ட பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 9 பேர் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். அஜ்மல் கசாப் என்ற பயங்கரவாதி உயிருடன் பிடிபட்டான். பின்னர் அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

இதற்கிடையில், மும்பை தாக்குதலின் போது இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்பை உறுதி செய்யும் தேசிய பாதுகாப்பு படையின் தலைவராக ஜோதி கிருஷ்ணன் தத் செயல்பட்டு வந்தார். அவரது தலைமையிலான பாதுகாப்பு படையினரே மும்பையில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி தாக்குதல் நடத்தினர். பயங்கரவாத தடுப்பு நடவடிக்கையில் தேசிய பாதுகாப்பு படையினர் களமிறக்கப்பட்டனர்.

முமபை தாக்குதல் 2008 நவம்பர் 26-ம் தேதி முதல் நவம்பர் 29-ம் தேதி நடைபெற்றது. பயங்கரவாதிகளில் இந்த தாக்குதலை தேசிய பாதுகாப்பு படையினர் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை பின்பற்றி தடுத்தனர்.

தேசிய பாதுகாப்பு படையின் இந்த நடவடிக்கைகளுக்கு ஜேகே தத் தலைமை தாங்கினார். அதன் பின்னர் தேசிய பாதுகாப்பு படை தலைவர் பணியில் இருந்து அவர் ஓய்வு பெற்றார்.    

இந்நிலையில், 72 வயதான ஜேகே தத்திற்க்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, கடந்த 14-ம் தேதி அவர் டெல்லி குருகிராமில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

கொரோனாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் ஜேகே தத் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். தேசிய பாதுகாப்பு படையின் முன்னாள் தலைவர் ஜேகே தத் கொரோனாவால் உயிரிழந்த நிகழ்விற்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.  
1 More update

Next Story