கொரோனா பெண் பணியாளர்களை தாக்கினால் 5 ஆண்டு சிறை தண்டனை: கர்நாடக அரசு அதிரடி


கொரோனா பெண் பணியாளர்களை தாக்கினால் 5 ஆண்டு சிறை தண்டனை:  கர்நாடக அரசு அதிரடி
x
தினத்தந்தி 24 May 2021 10:02 PM GMT (Updated: 2021-05-25T03:32:19+05:30)

கொரோனா பணியில் உள்ள பெண் பணியாளர்களை தாக்கினால் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும் என கர்நாடக அரசு அதிரடியாக அறிவித்து உள்ளது.

பெங்களூரு,

நாட்டில் கொரோனாவின் 2வது அலை தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.  இந்நிலையில், கர்நாடக சுகாதார மந்திரி சுதாகர் செய்தியாளர்களிடம் இன்று கூறும்பொழுது, கர்நாடகாவில் இதுவரை 446 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.  12 பேர் பலியாகி உள்ளனர் என கூறினார்.

இந்நிலையில், கர்நாடகாவின் பல்லாரி நகரில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கொரோனா நோயாளி ஒருவர் மரணம் அடைந்து விட்டார்.  இதற்கு சிகிச்சை அளித்த பெண் மருத்துவரே காரணம் என கூறி மருத்துவமனையில் வைத்து நோயாளியின் உறவினர்கள் அவரை கடுமையாக தாக்கியுள்ளனர்.

இதனை குறிப்பிட்டு பேசிய கர்நாடக சுகாதார மந்திரி, கொரோனா பணியில் உள்ள பெண் பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்துவது என்பது ஏற்று கொள்ள முடியாதது.  அப்படி தாக்குதல் நடத்துபவர்களுக்கு 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும் என அவர் தெரிவித்து உள்ளார்.


Next Story