கேரளாவில் புதிதாக இன்று 23,513 பேருக்கு கொரோனா பாதிப்பு: ஜூன் 9ஆம் தேதிவரை ஊரடங்கு நீட்டிப்பு

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 23,513 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்,
கேரளாவில் கொரோனா பரவல் தொடர்பான இன்றைய தகவல்களை மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன் வெளியிட்டார். அதன்படி, கேரளாவில் இன்று 23 ஆயிரத்து 513 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 24,64,360 ஆக உயர்ந்துள்ளது.
வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2 லட்சத்து 33 ஆயிரத்து 034 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 28 ஆயிரத்து 100 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், கேரளாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 22 லட்சத்து 52 ஆயிரத்து 505 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா தாக்குதலுக்கு இன்று 198 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், கேரளாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8 ஆயிரத்து 456 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1 லட்சத்து 41 ஆயிரத்து 759 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தும் விதமாக ஜூன் 9ஆம் தேதிவரை ஊரடங்கு நீட்டிக்கப்பட உள்ளதாக மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story