7 ஆண்டு கால மோடி ஆட்சியில் இந்தியா வரலாற்று சாதனைகளை படைத்திருக்கிறது; அமித்ஷா புகழாரம்

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பதவியேற்று 7 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கின்றன.
இதையொட்டி பிரதமர் மோடிக்கு, உள்துறை மந்திரி அமித்ஷா வாழ்த்து தெரிவித்து உள்ளார்.அப்போது அவர், 7 ஆண்டுகால மோடி ஆட்சியில் இந்தியா பல்வேறு வரலாற்று சாதனைகளை படைத்திருப்பதாக புகழாரம் சூட்டியுள்ளார். மேலும் ஏழைகளின் வாழ்க்கைத்தரம் மேம்பாடு, விவசாயிகள் மற்றும் பின்தங்கிய பிரிவினரை மைய நீரோட்டத்தில் இணைத்தது, வளர்ச்சி கொள்கைகள், இந்தியாவை வலுவான நாடாக உருவாக்கியது போன்றவற்றுக்காக பிரதமரை பாராட்டுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக தனது டுவிட்டர் தளத்தில் அவர் மேலும் கூறுகையில், ‘வளர்ச்சி, பாதுகாப்பு, பொது நலன் மற்றும் மைல்கல் சீர்திருத்தங்கள் ஆகியவற்றின் இணையற்ற ஒருங்கிணைப்புக்கு மோடி அரசு ஒரு தனித்துவமான உதாரணத்தை வழங்கியிருக்கிறது. மோடியின் தொலைநோக்குத் தலைமையின் கீழ், ஒவ்வொரு சவாலையும் நாம் சமாளிப்போம், இந்தியாவின் வளர்ச்சி பயணத்தை தடையின்றி தொடர்வோம்’ என்று நம்பிக்கையும் வெளியிட்டு உள்ளார்.
பிரதமர் மோடியின் சேவை மற்றும் அர்ப்பணிப்பு மீது கடந்த 7 ஆண்டுகளாக மக்கள் வைத்திருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கைக்காக அவர்களை வணங்குவதாகவும் அமித்ஷா குறிப்பிட்டு உள்ளார்.