தேசிய செய்திகள்

மேற்கு வங்காளத்தில் புதிதாக 10,137 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 131 பேர் பலி + "||" + 10,137 new corona infections in West Bengal: another 131 killed

மேற்கு வங்காளத்தில் புதிதாக 10,137 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 131 பேர் பலி

மேற்கு வங்காளத்தில் புதிதாக 10,137 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 131 பேர் பலி
மேற்கு வங்காளத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 10,137 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொல்கத்தா, 

மேற்கு வங்காள மாநில சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, அங்கு புதிதாக 10,137 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மேற்கு வங்காளத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 13,76,377 ஆக உயர்ந்துள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 131 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்ததையடுத்து, கொரோனாவால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15,541 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் கடந்த 24 மணி நேரத்தில் 17,856 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 12,73,788 ஆக அதிகரித்துள்ளது. 

மேற்கு வங்காளத்தில் தற்போது 87,048 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. மே.வங்க தலைமைச்செயலாளர் ஓய்வு, மம்தா பானர்ஜியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டார்
மேற்கு வங்காளத்தின் தலைமை செயலாளர் பொறுப்பில் இருந்து ஓய்வு பெற்ற அலபன் பந்தோபாத்யா, மம்தா அரசின் ஆலோசகராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
2. தலைமைச் செயலாளரை விடுவிக்க முடியாது மம்தா பானர்ஜி பிரதமர் மோடிக்கு கடிதம்
கொரோனா காலகட்டத்தில் தலைமைச் செயலாளரை விடுவிக்க முடியாது என்று மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளார்.
3. மேற்கு வங்காளம், ஆந்திராவில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்
மேற்கு வங்காளம் மற்றும் ஆந்திர மாநிலத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் வெளியாகி உள்ளது.
4. மேற்கு வங்காள முன்னாள் முதல்- மந்திரி ஆஸ்பத்திரியில் அனுமதி
மேற்கு வங்காள முன்னாள் முதல்- மந்திரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
5. மேற்கு வங்காள கவர்னர் மாளிகை முன் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை
மேற்கு வங்காள கவர்னர் மாளிகை முன் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு போலீசாருக்கு கவர்னர் ஜெக்தீப் தாங்கர் அறிவுறுத்தி உள்ளார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை