டெல்லியில் கொரோனா பாதிப்பு மேலும் குறைந்தது


டெல்லியில் கொரோனா பாதிப்பு மேலும் குறைந்தது
x
தினத்தந்தி 1 Jun 2021 3:59 PM IST (Updated: 1 Jun 2021 3:59 PM IST)
t-max-icont-min-icon

டெல்லியில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு விகிதம் 0.88- சதவிகிதமாக உள்ளது.

புதுடெல்லி,

தலைநகர் டெல்லியில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. நாளுக்குள் நாள் சீராக சரிந்து வரும் கொரோனா பாதிப்பு அங்குள்ள மக்களுக்கு சற்று ஆறுதலை கொடுத்துள்ளது. தொற்று பாதிப்பு குறைந்து வருவதையடுத்து, ஊரடங்கு கட்டுப்பாடுகளில் சில தளர்வுகளையும் டெல்லி அரசு அறிவித்துள்ளது. 

இந்த நிலையில், டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு மேலும் குறைந்துள்ளது. தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 623 ஆக இன்று பதிவாகியுள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் விகிதம் 0.88 சதவிகிதமாக இருக்கிறது. 

 கொரோனா தொற்று பாதிப்பால் இன்று மட்டும்  62 பேர் உயிரிழந்துள்ளனர்.  தொற்று பாதிப்பில் இருந்து  ஒரு நாளில் குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 1423- ஆக உள்ளது.  கொரோனா தொற்றுடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 10,178-ஆக உள்ளது. 
1 More update

Next Story