மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களிடம் 1.57 கோடி தடுப்பூசிகள் உள்ளன - மத்திய அரசு


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 2 Jun 2021 2:32 AM IST (Updated: 2 Jun 2021 2:32 AM IST)
t-max-icont-min-icon

தற்போது மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களிடம் 1.57 கோடி தடுப்பூசிகள் கைவசம் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

புதுடெல்லி, 

அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு 23 கோடியே 18 லட்சத்து 36 ஆயிரத்து 510 டோஸ் கொரோனா தடுப்பூசிகளை வழங்கி உள்ளது. 

இவற்றில் இதுவரை 21 கோடியே 51 லட்சத்து 48 ஆயிரத்து 659 டோஸ் தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு உள்ளன. மீதி 1 கோடியே 57 லட்சத்து 74 ஆயிரத்து 331 டோஸ் தடுப்பூசிகள், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிடம் கைவசம் உள்ளன என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Next Story