ஜம்மு காஷ்மீரில் கொரோனா தடுப்பூசி முதல் டோஸ் செலுத்தி கொண்ட 124 வயது மூதாட்டி!

ஜம்மு காஷ்மீரில் 24 வயது மூதாட்டி கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தி கொண்டார்.
ஜம்மு காஷ்மீர்,
இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை தீவிரமடைந்து வருகிறது. வைரஸ் பரவல் அதிகரித்து வரும் சூழ்நிலையும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமடைந்து வருகிறது. நாடு முழுவதும் இதுவரை 22 கோடி மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாரமுல்லாவில் உள்ள ஷ்ரக்வாரா பிளாக் வாகூராவைச் சேர்ந்த 124 வயதான ரெஹ்தி பேகம் என்ற மூதாட்டி கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்திக்கொண்டார். வீடுகளுக்கே சென்று தடுப்பூசி செலுத்தும் பணியின் போது மூதாட்டிக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாக அம்மாநில தகவல் மற்றும் மக்கள் தொடர்புத் துறை தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story