இமாசல பிரதேசத்தில் 12ம் வகுப்பு தேர்வு ரத்து; ஊரடங்கு 14ந்தேதி வரை நீட்டிப்பு

இமாசல பிரதேசத்தில் 12ம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டதுடன் ஊரடங்கு 14ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
சிம்லா,
கொரோனா பாதிப்பின் 2வது அலையில் நாடு பல இன்னல்களை சந்தித்து வருகிறது. இதனை முன்னிட்டு பல்வேறு மாநிலங்களும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை கடுமையாக்கி உள்ளன. முழு ஆண்டு பருவ தேர்வுக்கான காலம் கடந்துள்ள சூழலில் தொற்று குறையவில்லை.
இதனால், கொரோனா பாதிப்புகளை முன்னிட்டு சி.பி.எஸ்.இ. 12ம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்படுகின்றன என மத்திய அரசு அறிவித்தது. மாணவ மாணவியரின் நலனை கவனத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது என அரசு தெரிவித்துள்ளது.
இதனை தொடர்ந்து பல்வேறு மாநிலங்களும் 12ம் வகுப்பு மாநில தேர்வுகளை ரத்து செய்து அறிவிப்புகளை வெளியிட்டன. தமிழகத்தில் இதுபற்றி இன்னும் முடிவு எட்டப்படவில்லை. இந்த நிலையில், இமாசல பிரதேசத்தில் 12ம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்படுகிறது என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதேபோன்று ஊரடங்கு உத்தரவையும் வருகிற 14ந்தேதி காலை 6 மணிவரை நீட்டித்து ஆளும் அரசு அறிவித்துள்ளது.
Related Tags :
Next Story