தேசிய செய்திகள்

முதல்-மந்திரி பதவியில் எடியூரப்பாவே நீடிப்பார்: கர்நாடக துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் பேட்டி + "||" + Yediyurappa to continue as CM: Karnataka Deputy PM Ashwath Narayan

முதல்-மந்திரி பதவியில் எடியூரப்பாவே நீடிப்பார்: கர்நாடக துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் பேட்டி

முதல்-மந்திரி பதவியில் எடியூரப்பாவே நீடிப்பார்: கர்நாடக துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் பேட்டி
துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

பா.ஜனதா மேலிடம் விரும்பினால் முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்ய தயாராக இருப்பதாக எடியூரப்பா கூறியுள்ளார். அவர் ஏன் இவ்வாறு கூறினார் என்று தெரியவில்லை. எடியூரப்பாவே எங்கள் தலைவர். தான் அந்த பதவியில் ஒட்டிக் கொண்டிருக்கவில்லை என்று அவர் எதிர்க்கட்சி தலைவர்களுக்கு கூறியுள்ளார். முதல்-மந்திரி பதவியில் எடியூரப்பாவே நீடிப்பார். இதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம். தொண்டர்கள் அடிப்படையில் இயங்கும் கட்சி பா.ஜனதா. கட்சியே முக்கியம் என்று எடியூரப்பா கூறியுள்ளார். எங்கள் கட்சியில் சில தலைவர்களை எடியூரப்பா உருவாக்கியுள்ளார். அதனால், தான் கட்சியில் மாற்று தலைவர்கள் இருப்பதாக எடியூரப்பா கூறியுள்ளார்.

இவ்வாறு அஸ்வத் நாராயண் கூறினார்.


தொடர்புடைய செய்திகள்

1. எடியூரப்பா தலைமையிலான அமைச்சரவை கலைப்பு: கர்நாடக கவர்னர் உத்தரவு
கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையிலான அமைச்சரவையை கலைத்து கவர்னர் தவார் சந்த் கெலாட் உத்தரவிட்டுள்ளார்.
2. ராஜினாமா செய்யும்படி யாரும் நெருக்கடி தரவில்லை; எடியூரப்பா பேட்டி
கர்நாடக முதல் மந்திரி பதவியில் இருந்து எடியூரப்பா ராஜினாமா செய்துள்ளார்.
3. கர்நாடக முதல் மந்திரி பொறுப்பில் இருந்து ராஜினாமா: எடியூரப்பா அறிவிப்பு
கர்நாடக முதல் மந்திரி பதவியில் இருந்து விலகுவதாக எடியூரப்பா அறிவித்துள்ளார்.
4. பா.ஜனதா மேலிட உத்தரவுபடி செயல்படுவேன் என அறிவிப்பு; எடியூரப்பா இன்று பதவி விலகுகிறார்?
பா.ஜனதா மேலிட உத்தரவுபடி செயல்படுவேன் என முதல்-மந்திரி எடியூரப்பா நேற்று கூறியுள்ளார். இதனால் அவர் இன்று (திங்கட்கிழமை) பதவி விலகுவது உறுதியாகி உள்ளது. இதன் காரணமாக கர்நாடக அரசியலில் உச்சக்கட்ட பரபரப்பு நிலவுகிறது.
5. கர்நாடக முதல்-மந்திரியாக பதவி ஏற்று 2 ஆண்டுகள் நிறைவு; எடியூரப்பா நாளை ராஜினாமா?
முதல்-மந்திரியாக எடியூரப்பா பதவி ஏற்று நாளையுடன் (திங்கட்கிழமை) 2 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. இதனால் அவர் பதவியை ராஜினாமா செய்ய பா.ஜனதா மேலிடத்தின் உத்தரவுக்காக காத்திருப்பதாக தெரிகிறது. அவர் நாளை ராஜினாமா செய்ய உள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.