பிறந்த 6 நாட்களில் கொரோனா பாதித்த பச்சிளம் குழந்தை பலி

பிறந்த 6 நாட்களில் கொரோனா பாதித்த பச்சிளம் குழந்தை சிகிச்சை பலனின்றி பலியானது.
வசாய்,
மராட்டிய மாநிலம் பால்கர் மாவட்டம் தார்சேத் கிராமத்தை சேர்ந்த ஒரு பெண் பிரசவத்திற்காக பால்கர் டவுனில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
அந்த கர்ப்பிணிக்கு பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த 15 மணி நேரத்தில் குழந்தைக்கும், தாய்க்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அந்த குழந்தைக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது.
ஆனால் தாய்க்கு தொற்று பாதிப்பு இல்லை என முடிவு வெளியானது. இதையடுத்து தொற்று பாதித்த குழந்தை ஜவகர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தது. அங்கு உடல் நலம் மோசமானதால் நாசிக்கில் உள்ள மாநகராட்சி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டது. அங்கு டாக்டர்கள் அக்குழந்தைக்கு வெண்டிலேட்டர் மூலம் சிகிச்சை அளித்து வந்தனர்.
இந்தநிலையில் கடந்த 6 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த அக்குழந்தை சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தது. இதனை சீனியர் குழந்தை டாக்டர் பங்கஜ் கஜ்ரே உறுதிப்படுத்தினார்.
Related Tags :
Next Story