கருப்பு பூஞ்சை; கர்நாடகத்திற்கு 50 ஆயிரம் மருந்து குப்பிகளை ஒதுக்க வேண்டும் -மத்திய அரசுக்கு காங்கிரஸ் வலியுறுத்தல்


கருப்பு பூஞ்சை; கர்நாடகத்திற்கு 50 ஆயிரம் மருந்து குப்பிகளை ஒதுக்க வேண்டும் -மத்திய அரசுக்கு காங்கிரஸ் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 6 Jun 2021 8:25 PM GMT (Updated: 6 Jun 2021 8:25 PM GMT)

கருப்பு பூஞ்சை நோய்க்கு சிகிச்சை அளிக்க 50 ஆயிரம் ஆம்போடெரிசின் மருந்து குப்பிகளை கர்நாடகத்திற்கு ஒதுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கர்நாடக காங்கிரஸ் செயல் தலைவர் ஈஸ்வர் கன்ட்ரே வலியுறுத்தி உள்ளார்.

பெங்களூரு,

கர்நாடக காங்கிரஸ் செயல் தலைவர் ஈஸ்வர் கன்ட்ரே பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு விஷயங்களில் அரசு பொய்யான தகவல்களை மக்களுக்கு வழங்குகிறது. இப்போது கருப்பு பூஞ்சை பாதிப்பு மற்றும் உயிரிழப்பு தொடர்பான விவரங்களிலும் தவறான புள்ளி விவரங்களை வெளியிடுகிறது. 

இந்த கருப்பு பூஞ்சை பாதிப்பு தொடர்பாக சரியான தகவல்களை அரசு வழங்காததால், நமக்கு கிடைக்க வேண்டிய மருந்து கிடைக்கவில்லை. இதனால் அந்த ஆம்போடெரிசின் மருந்துக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கொரோனாவில் இருந்து மீண்டவர்களில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மாநிலம் முழுவதும் இந்த பாதிப்பு பரவியுள்ளது. ஆனால் ஆம்போடெரிசின் மருந்து பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதை சரிசெய்ய அரசு எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. மத்திய அரசு உடனடியாக 50 ஆயிரம் ஆம்போடெரிசின் மருந்து குப்பிகளை கர்நாடகத்திற்கு ஒதுக்க வேண்டும்.

இவ்வாறு ஈஸ்வர் கன்ட்ரே கூறினார்.

Next Story