தெலுங்கானாவில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிப்பு


தெலுங்கானாவில் ஊரடங்கு  கட்டுப்பாடுகள் நீட்டிப்பு
x
தினத்தந்தி 8 Jun 2021 9:52 PM IST (Updated: 8 Jun 2021 9:52 PM IST)
t-max-icont-min-icon

தெலுங்கானாவில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் மேலும் 10 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஐதராபாத்,

தெலுங்கானாவில்  கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. எனினும், தொற்று பரவலை மேலும் கட்டுப்படுத்தும் வகையில் அம்மாநிலத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள்  10 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. 

ஜூன் 10 ஆம் தேதி முதல் 10 நாட்கள் ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்படுவதாக தெரிவித்துள்ள தெலுங்கானா அரசு, இரவு நேர ஊரடங்கு  (மாலை 6 மணி முதல் காலை 6 மணி) தொடர்ந்து அமலில் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

தெலுங்கானாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,897 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  தொற்று பாதிப்பில் இருந்து 2982- பேர் குணம் அடைந்த நிலையில்,  15 பேர் நோய்த்தொற்றுக்கு ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர்.
1 More update

Next Story