தேசிய செய்திகள்

மராட்டியத்தில் புதிதாக 10,989 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 261 பேர் பலி + "||" + Maharashtra records 10,989 fresh Covid-19 cases in last 24 hours

மராட்டியத்தில் புதிதாக 10,989 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 261 பேர் பலி

மராட்டியத்தில் புதிதாக 10,989 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 261 பேர் பலி
மராட்டியத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 10,989 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
மும்பை,

மராட்டியத்தில் கடந்த சில வாரங்களாக தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. இந்நிலையில் மராட்டிய மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 10,989 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 58,63,880 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக மேலும் 261 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் மாநிலத்தில் இதுவரை கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1,01,833 ஆக அதிகரித்துள்ளது.  தொற்று பாதிப்பில் இருந்து இன்று மேலும் 16,379 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டநிலையில், மாநிலத்தில் இதுவரை குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 55,97,304 ஆக அதிகரித்துள்ளது. 

தொற்று பாதிப்புடன் தற்போது 1,61,864 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மும்பையில் இன்று 788 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்று பாதிப்பு, பரவல் வேகம் குறைந்துள்ளதால் மராட்டியத்தில் தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. 

தொடர்புடைய செய்திகள்

1. மராட்டியத்தில் கனமழையால் கடும் பாதிப்பு
மராட்டியத்தில் கனமழையால் பல இடங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. வெள்ள பாதிப்பு பகுதிகளில் இருந்து சுமார் 84 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
2. மராட்டியத்தில் புதிதாக 6,753 பேருக்கு கொரோனா பாதிப்பு
மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையும் மெல்ல மெல்ல சரிந்து வருகிறது.
3. மராட்டியத்தில் கனமழைக்கு இடையே கட்டிடம் இடிந்து விழுந்தது- 7 பேர் உயிரிழப்பு
மராட்டியத்தில் கனமழைக்கு இடையே கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர்.
4. மராட்டியத்தில் இன்று மேலும் 7,302 பேருக்கு கொரோனா தொற்று
மராட்டியத்தில் இன்று மேலும் 7,302 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. மராட்டியத்தில் மீண்டும் 8 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு
மராட்டியத்தில் இன்று மேலும் 8,159 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.