ஜம்மு காஷ்மீர், அரியானா - கொரோனா பாதிப்பு விவரம்

இந்தியாவில் கொரோனா வைரசின் 2-வது அலை தாக்கம் மெல்ல மெல்ல குறைந்து வருகிறது.
ஸ்ரீநகர்,
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் இன்று 1,098- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து 3046- பேர் குணம் அடைந்துள்ள நிலையில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். ஜம்மு காஷ்மீரில் இதுவரை தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 லட்சத்து 03 ஆயிரத்து 749- ஆக அதிகரித்துள்ளது.
தொற்றில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 2 லட்சத்து 79 ஆயிரத்து 779- ஆக உள்ளது. தொற்று பாதிப்பு காரணமாக இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 4118- ஆக உள்ளது. தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 19,852- ஆக உள்ளது.
அரியானாவில் கடந்த 24 மணி நேரத்தில் 528- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்றில் இருந்து 940- பேர் குணம் அடைந்துள்ளனர். 40 பேர் தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர். தொற்று பாதிப்புடன் 7079- பேர் சிகிச்சையில் உள்ளனர்.
Related Tags :
Next Story