தேசிய செய்திகள்

ராஜஸ்தானில் 2 ஆயிரம் கலைஞர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம்: கொரோனாகால நிதி அறிவிப்பு + "||" + Rs 5,000 per 2,000 artists in Rajasthan: Corona financial announcement

ராஜஸ்தானில் 2 ஆயிரம் கலைஞர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம்: கொரோனாகால நிதி அறிவிப்பு

ராஜஸ்தானில் 2 ஆயிரம் கலைஞர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம்:  கொரோனாகால நிதி அறிவிப்பு
ராஜஸ்தானில் 2 ஆயிரம் கலைஞர்களுக்கு முதல் மந்திரி தலா ரூ.5 ஆயிரம் கொரோனா நிதியுதவி அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.


ஜெய்ப்பூர்,

நாட்டில் கொரோனா 2வது அலையில் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றான ராஜஸ்தானில் சமீப நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது.  இந்நிலையில், கடந்த 7ந்தேதி முதல் ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.

இதன்படி, காலை 6 மணி முதல் மாலை 4 மணிவரை கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் திறக்க அனுமதிக்கப்படும்.  அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் மாலை 4 மணிவரை ஒவ்வொரு நாளும் 50 சதவீத பணியாளர்களுடன் செயல்படும்.

எனினும், வார இறுதி நாட்களான வெள்ளி கிழமை மாலை முதல் திங்கட்கிழமை காலை வரை ஊரடங்கு அமலில் இருக்கும்.

இந்நிலையில், முதல் மந்திரி அசோக் கெலாட் 2 ஆயிரம் கலைஞர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் கொரோனா நிதியுதவி வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.  அரசின் இந்த முடிவால், நிதி நெருக்கடியில் உள்ள மற்றும் தேவையாக உள்ள கலைஞர்கள் நிவாரணம் பெறுவார்கள் என கூறியுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. மேற்கு வங்காள சட்டசபை இடைத்தேர்தல்; இடதுசாரி கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு
மேற்கு வங்காளத்தில் 4 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்களை இடதுசாரி கட்சி அறிவித்து உள்ளது.
2. கோவை மாவட்டத்திற்கு கூடுதல் கட்டுப்பாடுகள்; ஆட்சியர் அறிவிப்பு
கோவை மாவட்டத்திற்கு கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்து ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.
3. தமிழக பள்ளிகளில் பாடத்திட்டங்கள் குறைக்கப்படும்; அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு
சி.பி.எஸ்.இ. போல் தமிழக பள்ளிகளிலும் பாடத்திட்டங்கள் குறைக்கப்படும் என பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.
4. கெஜ்ரிவாலின் இலவச மின்சார அறிவிப்பு மக்களை முட்டாளாக்கும் நாடகம்: பஞ்சாப் மந்திரி
டெல்லி முதல் மந்திரி கெஜ்ரிவாலின் 300 யூனிட் இலவச மின்சார அறிவிப்பு மக்களை முட்டாளாக்கும் நாடகம் என பஞ்சாப் மந்திரி கூறியுள்ளார்.
5. அமெரிக்காவில் 150 நாட்களில் 30 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள்: அதிபர் பைடன் அறிவிப்பு
அமெரிக்காவில் 150 நாட்களில் 30 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டு உள்ளன என அதிபர் பைடன் அறிவித்துள்ளார்.