தேசிய செய்திகள்

மராட்டிய மாநிலத்தில் தொடரும் கனமழை + "||" + Rain lashes continuously Parts of Maharashtra

மராட்டிய மாநிலத்தில் தொடரும் கனமழை

மராட்டிய மாநிலத்தில் தொடரும் கனமழை
மராட்டிய மாநிலத்தின் பல்வேறு பல்வேறு பகுதிகளில் 3-வது நாளாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
மும்பை,

இந்தியாவில் தென்மேற்கு பரவமழை தொடங்கியுள்ளது. குறிப்பாக, மராட்டிய மாநிலத்தில் கடந்த 9-ம் தேதி முதல் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் 3-வது நாளாக கனமழை பெய்து வருகிறது.

கனமழை காரணமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள சாலைகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமம் அடைந்துள்ளனர். சில பகுதிகளில் கனமழையால் வீடுகள் இடிந்து உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது.    

மாநிலத்தில் மேலும் சில நாட்களுக்கு கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.  கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் மராட்டியத்தில் மக்கள் மிகுந்த பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.
Related Tags :

தொடர்புடைய செய்திகள்

1. மராட்டிய மாநிலத்தின் பல்வேறு இடங்களில் கனமழை
மராட்டிய மாநிலத்தின் பல்வேறு இடங்களில் இன்று அதிகாலை முதல் கனமழை பெய்து வருகிறது.
2. 1 மணி நேரம் பலத்த மழை
சாத்தூர், தாயில்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 1 மணி நேரம் பலத்த மழை பெய்தது.
3. ஆலங்குளம் பகுதியில் பலத்த மழை
ஆலங்குளம் பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
4. இலங்கையில் கனமழை: 14 பேர் பலி; 2.45 லட்சம் பேர் பாதிப்பு
இலங்கையில் கனமழைக்கு 14 பேர் உயிரிழந்து உள்ளனர். 2.45 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
5. டெல்லி உள்பட 3 மாநிலங்களில் கனமழை: மரங்கள் வேருடன் சாய்ந்தன; போக்குவரத்து பாதிப்பு
டெல்லி, கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய 3 மாநிலங்களில் பெய்து வரும் மழையால் வெள்ள நீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடுகிறது.