தேசிய செய்திகள்

இந்தியாவில் கொரோனாவால் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது - மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் + "||" + The number of people receiving treatment for corona is declining - the Federal Secretary of Health

இந்தியாவில் கொரோனாவால் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது - மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர்

இந்தியாவில் கொரோனாவால் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது - மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர்
இந்தியாவில் கொரோனாவால் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது என மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,

கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை உச்சம் தொட்டு, வீழ்ந்து கொண்டிருக்கிறது. 8-ந் தேதியில் இருந்து தொடர்ந்து 4-வது நாளாக இன்றும் தினசரி தொற்று பாதிப்பு 1 லட்சத்துக்குள் அடங்கி இருக்கிறது.

இந்நிலையில், கொரோனாவிற்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர்  லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார். மேலும்  தொற்றில் இருந்து குணமடைந்தோர் விகிதமும் 94.9% ஆக அதிகரித்துள்ளதாகவும் 24 மாநிலங்களில் 1,000க்கும் குறைவான பாதிப்புகளே பதிவாகி வருகிறது என குறிப்பிட்டுள்ளார்.