மாநிலங்களிடம் 1.17 கோடி தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளது - மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்


மாநிலங்களிடம் 1.17 கோடி தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளது - மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்
x
தினத்தந்தி 12 Jun 2021 12:24 AM IST (Updated: 12 Jun 2021 12:24 AM IST)
t-max-icont-min-icon

மாநிலங்களிடம் 1.17 கோடி தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி, 

மாநிலங்களிடமும், யூனியன் பிரதேசங்களிடமும் 1 கோடியே 17 லட்சத்து 56 ஆயிரத்து 911 தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று கூறி உள்ளது.

இன்னும் 3 நாட்களில் மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் 38 லட்சத்து 21 ஆயிரத்து 170 தடுப்பூசிகள் வினியோகிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

இதுவரை மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் இலவசமாகவும், நேரடி கொள்முதல் திட்டத்தின்கீழும் மத்திய அரசு 25 கோடியே 60 லட்சத்து 8 ஆயிரத்து 80 தடுப்பூசிகள் வழங்கி உள்ளது. இதுவரை நாட்டில் 24 கோடியே 44 லட்சத்து 6 ஆயிரத்து 96 தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இது நேற்று காலை 8 மணி நிலவரம் ஆகும்.

Next Story