ஒரே நாடு, ஒரே ரேஷன் அட்டை திட்டத்தை செயல்படுத்த வேண்டும்; மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு


ஒரே நாடு, ஒரே ரேஷன் அட்டை திட்டத்தை செயல்படுத்த வேண்டும்; மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 11 Jun 2021 7:54 PM GMT (Updated: 11 Jun 2021 7:54 PM GMT)

ஒரே நாடு, ஒரே ரேஷன் அட்டை திட்டத்தை மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் செயல்படுத்த வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

வழக்கு விசாரணை
புலம்பெயர் தொழிலாளர்களின் பிரச்சினைகள், துயரம் தொடர்பாக தாமாக முன்வந்து பதிவு செய்த வழக்கு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் அசோக் பூஷண், எம்.ஆர்.ஷா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று 
நடைபெற்றது. மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ஒரே நாடு, ஒரே ரேஷன் அட்டை திட்டத்தை டெல்லி, மேற்கு வங்காளம், சத்தீஷ்கார், அசாம் போன்ற மாநிலங்கள் செயல்படுத்தவில்லை என்றார்.

டெல்லி, மேற்கு வங்காளம்
அதற்கு டெல்லி அரசு சார்பில் ஆஜரான வக்கீல் ஆட்சேபம் தெரிவித்துடன், டெல்லியில் ஒரே நாடு, ஒரே ரேஷன் அட்டை திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்றார். மேற்கு வங்காளத்தின் சார்பில் ஆஜரான வக்கீல், ஒரே நாடு, ஒரே ரேஷன் அட்டை திட்டத்தை செயல்படுத்த ஆதார் எண்களை இணைக்கும் பணி நடைபெறுவதால் தாமதமாகிறது என வாதிட்டார்.

செயல்படுத்த வேண்டும்
அதையடுத்து நீதிபதிகள், ஒவ்வொரு மாநிலம், யூனியன் பிரதேசத்திலும் உள்ள புலம்பெயர் தொழிலாளர்கள் ரேஷன் பொருட்களை பெறுவதற்கு உதவியாக ஒரே நாடு, ஒரே ரேஷன் அட்டை திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என 
அறிவுறுத்தினர்.

மத்திய அரசுக்கு கேள்வி
மேலும், அமைப்புசாரா புலம்பெயர் தொழிலாளர் விவரங்களை இணையத்தில் பதிவேற்ற ஏன் கால தாமதமாகிறது என மத்திய அரசுக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். புலம்பெயர் தொழிலாளர்களின் பிரச்சினைகள், துயரம் தொடர்பாக 
தாமாக முன்வந்து பதிவு செய்த வழக்கில் தீர்ப்பை மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

Next Story