வரலாறு காணாத உச்சம்; ராஜஸ்தானில் டீசல் விலையும் ரூ.100 ஆக உயர்வு


வரலாறு காணாத உச்சம்;  ராஜஸ்தானில் டீசல் விலையும் ரூ.100 ஆக உயர்வு
x
தினத்தந்தி 12 Jun 2021 9:09 PM GMT (Updated: 12 Jun 2021 9:09 PM GMT)

எரிபொருள் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்திருப்பது வாகன ஓட்டிகள் இடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுடெல்லி, 

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டி வருகிறது. நேற்றும் பெட்ரோலுக்கு 27 காசுகளும், டீசலுக்கு 23 காசுகளும் அதிகரித்து இருந்தது. இது கடந்த மே 4-ந் தேதிக்கு பிறகு அதிகரிப்பது 23-வது முறையாகும்.

இதனால் பல மாநிலங்களில் பெட்ரோல் விலை ரூ.100-ஐ கடந்து விட்டது. அந்த வகையில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மராட்டியம், ஆந்திரா, தெலுங்கானா, லடாக் ஆகிய மாநிலங்களில் ரூ.100-க்கு அதிகமாக பெட்ரோல் விற்கப்படுகிறது.

இந்த வரிசையில் 7-வது மாநிலமாக கர்நாடகாவும் இணைந்து விட்டது. அங்கும் பல இடங்களில் பெட்ரோல் விலை ரூ.100-ஐ எட்டியிருக்கிறது. அங்குள்ள பீதர், பல்லாரி, கொப்பல், சிவமொக்கா, சிக்கமகளூரு உள்ளிட்ட இடங்களில் பெட்ரோல் விலை ரூ.100-ஐ கடந்திருக்கிறது. இதற்கிடையே ராஜஸ்தானில் டீசல் விலையும் நேற்று ரூ.100-ஐ தொட்டு விட்டது.

இந்தியாவில் பெட்ரோல், டீசலுக்கு அதிக வாட் வரி விதிக்கும் மாநிலங்களில் ராஜஸ்தான் முதல் இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story