தெலுங்கானாவில் புதிதாக 1280 பேருக்கு கொரோனா: 15 பேர் பலி


தெலுங்கானாவில் புதிதாக 1280 பேருக்கு கொரோனா: 15 பேர் பலி
x
தினத்தந்தி 13 Jun 2021 8:57 PM IST (Updated: 13 Jun 2021 8:57 PM IST)
t-max-icont-min-icon

தெலுங்கானாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,280 பேருக்குத் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஐதராபாத்,

தெலுங்கானா மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி,

கடந்த 24 மணி நேரத்தில் 1,280 பேருக்குத் தொற்று பதிவாகியுள்ளது. இதையடுத்து மாநிலத்தில் தொற்று பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6,03,369 -ஆக அதிகரித்துள்ளது. தற்போது 21,137 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 2,261 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5,78,748-ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தொற்று பாதிப்புக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,484 -ஆக உள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story